புதினா சாதம்
Share
புதினா சாதம்
புதினா சாதம் செய்வது எப்படி
தேவையானவை:
பாஸ்மதி அரிசி - ஒரு கப்,
எண்ணெய் அல்லது நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்,
மிளகு - 2 டீஸ்பூன்,
கிராம்பு - 2,
இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன்,
வெங்காயம் - 1 (நறுக்கிக் கொள்ளவும்),
பொடியாக நறுக்கிய புதினா - அரை கப்,
பச்சைமிளகாய் - 3 (கீறிக் கொள்ளவும்),
உப்பு - தேவையான அளவு.
Method
புதினா சாதம் செய்முறை:
அரிசியை உதிரியாக வடித்து ஆறவைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இஞ்சி - பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.
மிளகு கிராம்பு, பச்சைமிளகாய் சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கி, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
புதினா இலைகளைப் போட்டு வதக்கி, ஆற வைத்துள்ள சாதம், உப்பு சேர்த்து கிளறி சூடாகப் பரிமாறவும்.
Hits: 1765, Rating : ( 5 ) by 1 User(s).